செய்திகள்

காணாமல்போனோர் ஆணைக்குழு: அம்பாறையில் 59 சாட்சியங்கள் இன்று பதிவு

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான இரண்டாம் நாள் அமர்வில் இன்று 59 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் இன்று காலை 8.30 க்கு ஆரம்பிக்கப்பட்ட சாட்சி விசாரணைகளுக்கு 112 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் குணதாச தெரிவித்தார். இன்றைய அமர்வில் மேலும் பல புதிய முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.