செய்திகள்

காணாமல்போனோர் குறித்த இறுதி அறிக்கை ஜூலையில் வெளியிடப்படும்: மைத்திரி உறுதி

காணாமல்போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனிடம் உறுதியளித்திருக்கின்றார்.

லண்டனில் கமரூனை சந்தித்துத்து உரையாடியபோதே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி, இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளாத எவரும் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லமுடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கின்றார்.

பிரித்தானிய பிரதமரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று முன்தினம் சந்தித்து உரையாடியோது பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவர் விளக்கினார்.

காணாமல்போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. எதிர்வரும் ஜூலை மாதம் இதன் விசாரணைகள் முடிவடையும். அதன் இறுதி அறிக்கையும் வெளியிடப்படும். இந்த அறிக்கையை யாராவது ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அதனையிட்டு அவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.