செய்திகள்

காணாமல்போன இந்திய விமானம் காரைக்கால் அருகே கடலில் விழுந்தது

நேற்று முன்தினம் இரவு காணாமல்போன இந்தியக் கடலோர காவல் படைக்குச் சொந்தமான ‘டார்னியர்’ ரக சிறிய விமானம் புதுச்சேரி கடற்பகுதியில் காரைக்கால் அருகே கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமானப்படை தளத்தில் இருந்து கடலோர காவல் படைக்குச் சொந்தமான ‘சிஜி 791’ என்ற ‘டார்னியர்’ சிறிய ரக விமானம் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தமிழகம் மற்றும் புதுவை கடல் பகுதியில் வழக்கமான கடல் ரோந்துப் பணிக்காக சென்றது.

காரைக்கால் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அந்த விமானம் திடீரென எரிந்து கடலில் விழுந்தது. அந்த விமானத்தில் 2 விமானிகள் உட்பட 3 பேர் இருந்தனர். விமானம் புதுச்சேரியில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் கடலில் விழுந்ததாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமானத்தை தேடும் பணி காலையில் தொடங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.