செய்திகள்

காணாமல்போன ஊடகவியலாளர் குடும்பத்துக்கு 5000அமெரிக்க டொலரை வழங்கிய உபுல்

பொதுநலவாய அரசதலைவர்களின்  சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் கல்விநிதியச்சங்கம் ஆகியன இணைந்து இலங்கையின் முன்னாள் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரியவுக்கு வழங்கிய ஐயாயிரம் அமெரிக்க டொலரை காணமல்போன ஊடகவியலாளர் குடும்பத்துக்கு வழங்கினார்.

காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா குறித்த நிதியை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

இன்று மாலை கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் சங்க அலுவலகத்தில் இந்நிகழ்வு நடந்தது.