செய்திகள்

காணாமல் போனோர் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

காணாமல் போனோர் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

வடக்கு கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இவ் ஆர்ப்பாட்டத்தில் காணாமல்போனோரின் உறவுகள் பங்கேற்றிருந்தன.

இதன்போது காணாமல்போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நம்பிக்கை இல்லை எனவும் சர்வதேச விசாரணைiயே தேவையெனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

வவனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பின்னர் மன்னார் வீதி வழியாக யாழ் வீதியை வந்தடைந்து வவுனியா மாவட்ட செயலகத்தில் மகஜர் கையளிப்புடன் நிறைவடைந்தீருந்தது.

மாவட்ட செயலகத்திற்கு சென்ற ஆர்ப்பாட்டகாரர்கள் வவுனியாஅரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்திருந்தனர். மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர இவ் விடயம் தொடர்பாக உரிய இடத்திற்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.

இதன்போது காணாமல் போனோரின் உறவுகளுடன் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் ரி. தேவராஜா, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் வன்னி அமைப்பாளர் எஸ். கோவிந்தராஜ், அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Vavuniya (2) Vavuniya (3) Vavuniya (4)