செய்திகள்

காணாமல் போன இலங்கை யுவதி மீட்பு!

நேற்று வியாழக்கிழமை இரவு அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் காணாமல் போன இலங்கை யுவதி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

அனுஷ்கா எல்லலகொட என்ற 19 வயதுடைய யுவதியே இன்று காலை 7.50 மணியளவில் நியூ பார்ம், மெர்தியர் வீதியில் வைத்து பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளார்.

பஸ்ஸில் சென்று கொண்டிருந்த இவர் ஒரு சந்தியில் பஸ் நின்றபோது உடனே திரும்பி வருவதாகக் கூறி இறங்கிப் போயுள்ளார். ஆனால் அவர் திருப்பி வரவில்லை.

இது தொடர்பில் பொலிஸின் முறைப்பாடு பதியப்பட்டது. அவர் தனது கையடக்க தொலைபேசி, பேர்ஸ் என்பவற்றையும் விட்டுச் சென்றுள்ளார். அவுஸ்திரேலிய பொலிஸார் இவரை தரை வழியாகவும் விமானம் மூலமும் தேடினர்.

இந்நிலையிலேயே, இவர் பொதுமக்களால் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.50 மணியளவில் நியூ பார்ம், மெர்தியர் வீதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

தற்போது குறித்த யுவதி பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.