செய்திகள்

காணாமல் போன குடும்பஸ்தர் மட்டு. வாவியில் இருந்து சடலமாக மீட்பு (படங்கள்)

மட்டக்களப்பில் நேற்று (1.5.2015) வெள்ளிக்கிழமை மாலை காணாமல் போன குடும்பஸ்தர் இன்று (2.5.2015) சனிக்கிழமை நண்பகல் மட்டக்களப்பு கல்லடி வாவியோரம் சடலமாக மீடகப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி றிவைரா விடுதி வீதிப்பக்கமாகவுள்ள வாவியிலிருந்து இவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

பிரதான வீதி கிரான் பிரசேத்தைச் சேர்ந்த ஞானமணி விதிஸ்தகுமார் (40) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.

S1920035

S1920036