செய்திகள்

காணாமல் போன 100 வாகனங்கள் எங்கே? ஜனாதிபதி செயலக வாகனப் பொறுப்பாளர் கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியில் ஜனாதிபதி செயலக போக்குவரத்து பிரிவு பணிப்பாளராக கடமையாற்றிய கீர்த்தி திஸாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்திலிருந்து 100 வாகனங்கள் காணாமல் போன குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தடுத்து வைக்கப்பட்டு இவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.