செய்திகள்

காதலியின் கழுத்தை வெட்டியவர் கைது!

வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் காதலியின் கழுத்தை வெட்டிய குற்றச்சாட்டில் காதலனான 20 வயதுடைய இளைஞனை நேற்றையதினம் கைது செய்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தன்னைக் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதாகக்கூறி கடந்த மே மாதம் 25ஆம் திகதி யுவதியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன், யுவதியின் கழுத்தை வெட்டியதுடன், தன்னையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இளைஞன் சிகிச்சை பெற்று நேற்று புதன்கிழமை வீடு திரும்பியதை அடுத்து, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.