செய்திகள்

காதலியின் குழந்தைக்கு தந்தையா? பொலிவியா அதிபருக்கு டி.என்.ஏ. பரிசோதனை

காதலியின் குழந்தைக்கு தந்தையா என அறிய பொலிவியா அதிபர் இவோ மோரெல்சுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடந்தது.பொலிவியா நாட்டின் அதிபர் இவோ மோரெல்ஸ் (56). இவரது முன்னாள் காதலி கேபிரியல்லா ஷபாதாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அக் குழந்தை இறந்து விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென கேபிரியல்லா ஒரு சிறு வனை காட்டி இவன் பொலி வியா அதிபர் இவோ மோரெல்சின் மகன் என உரிமை கொண்டாடினார். அதை இவோ மறுத்தார்.

எனவே, இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அந்த சிறுவனின் தந்தை யார் என அறிய அதிபர் இவோ மோரெல்சுக்கு டி.என்.ஏ. பரி சோதனை நடத்த உத்தர விட்டார்.
அதை தொடர்ந்து அவருக்கு டி.என்.ஏ. பரிசோ தனை நடத்தப்பட்டது. இதற்கிடையே, இவோவின் முன்னாள் காதலி கேபிரியலா ஷபாதா பண மோசடி வழக்கில் தற்போது சிறையில் உள்ளார்.