செய்திகள்

காதல் விவகாரம் இளைஞன் கொலை

கண்டி தவுலகல பகுதியில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞனொருவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட் கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இதில் பிலிமத்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனொருவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதல் விவகாரம் காரணமாக இந்த கொலைஇடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளனர்.