காத்தான்குடியில் துப்பாக்கிசூட்டு சம்பவம் : இராணுவவீரர் பலி
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி, 5ஆம் குறிச்சி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மதவாச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய டபிள்யூ.எம்.கருநாரத்ன என்ற இராணுவ வீரரே உயிரிழந்துள்ளார்.
5ஆம் குறிச்சி பகுதியில் கடமையிலிருந்த மேற்படி இராணுவ வீரர், கடமையை முடித்துக்கொண்டு கோவில்குளம் இராணுவ முகாமை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சக இராணுவ வீரர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த இவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டாரா அல்லது அவரது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதா என்பது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.