செய்திகள்

காந்தியின் கொள்ளுப் பேரன் மீது வழக்குப் பதிவு

ஜலந்தர் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் மீது அவதூறான விமர்சனம் செய்ததற்காக காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி மீது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அண்மையில் செய்தியாளர்களிடையே பேசிய துஷார் காந்தி, “இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஒரு குற்றவாளியாக இருந்தார். அதனால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைப்பதற்கு காந்தி எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை” என்று கூறியிருந்தார்.

துஷார் காந்தியின் இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஜன் ஜக்ரிதி மன்ச் எனும் தொண்டு நிறுவனம் ஒன்று துஷார் காந்தி மீது காவல்துறையில் புகார் செய்தது. அதன் பேரில் துஷார் காந்தி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 ஏ-வின் கீழ் ஜலந்தர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.