காந்தி சிலை அருகே ரவுடியின் தலையை வெட்டி வீசிய கும்பலின் செயலால் பதற்றம் (படங்கள்)
விழுப்புரம் பகுதியில் பிரபல ரவுடியாக இருந்த பத்தர் செல்வம் மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நீண்ட காலமாக முன் விரோதம் இருந்து வருகிறது.இதனால் அடிக்கடி இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மோதல்கள் நிகழும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை விழுப்புரம் நகராட்சி பூங்கா செட்டில் கார்க் விளையாடிவிட்டு வீடு திரும்பிய பத்தர் செல்வத்தை மர்மக் கும்பல் வழிமறித்து வெட்டி படுகொலை செய்துள்ளது.மேலும் கொலையில் ஈடுபட்ட மர்மக் கும்பல், படுகொலை செய்யப்பட்ட பத்தர் செல்வத்தின் தலையை புதுவை நெடுஞ்சாலை காந்தி சிலை அருகே வீசிவிட்டு சென்றுள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.