செய்திகள்

கானாவில் பெட்ரோல் நிலையத்தில் தீ விபத்து: 70 பேர் தீயில் கருகி பலி

கானாவில் பெட்ரோல் நிலையத்தில் தீப்பிடித்ததில் அங்கு மழைக்கு ஒதுங்கியிருந்த 70 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

அநாட்டின் தலைநகர் அக்ராவில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருவதுடன் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கிய பலரும் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தனர். அவர்களில் பலர் அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் ஒதுங்கியபோது திடீரென அந்த பெட்ரோல் நிலையத்தில்தீப்பிடித்தது. இதில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர்.விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தீயணைப்பு வண்டிகள் அங்கு விரைந்தன. எனினும் கொழுந்து விட்டு எரிந்த தீயில் சிக்கி 70 பேர் பலியானார்கள்.