செய்திகள்

காமன்கூத்து நிகழ்வு

மலையகத்தில்  வாழும் தமிழர்களின் மத்தியில்  காமன் கூத்து கலை மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது அந்த வகையில்  தைமாதம் ஆரம்பித்து  மாசிமாத நடுப்பகுதியில்  இவ்விழாவை கொண்டாடுகின்றனர்.  நானுஒயா கிளாரன்டன் மேற்பிரிவு தோட்டத்தில் காமன் கூத்து விழா 14.03.2015 அன்று சனிக்கிழமை இரவு 9மணிக்கு ஆலயத்தில் விசேட பூஜைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு  இரவு பொழுது பல்வேறுப்பட்ட அவதாரங்களுடன் இவ்விழா நடைபெறவுள்ளது.

மன்மதனை எரியூட்டும் நிகழ்வு மறுநாள் அதிகாலை 5மணிக்கு இடம்பெறும்  இவ்விழாவில் தோட்ட அதிகாரிகள் பொலிஸ் நிலைய அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.