செய்திகள்

காருடன் மோதிய இராணுவ டிரக்! கணவன் – மனைவி பலி (படங்கள்)

பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலன்னறுவை மட்டகளப்பு பிரதான வீதியில் மரதான்கடவல 62 கட்டைப்பகுதியில் காருடன் இராணுவ டிரக் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் காரில் பயணம் செய்த 54 வயது மதிக்கதக்க கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் 21.05.2015 அன்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில், அவர்களது 16 வயது மதிக்கதக்க மகன்கள் இருவரும் காயங்களுடன் உயிர்தப்பியுள்ளதாகவும் அவர்கள் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு விபத்துக்குள்ளாகியவர்கள் பொலன்னறுவை ஜயன்திபுர பகுதியை சேர்ந்தவர்களாவர்.

விபத்துக்கு காரணமாக இருந்த இராணுவ ட்ரக் வாகனத்தின் சாரதியை 22.05.2015 அன்று காலை கைது செய்துள்ளதாகவும் பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்ததோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனா்.

Accident Polanaruwa  (2)

Accident Polanaruwa  (4)

Accident Polanaruwa  (6)

Accident Polanaruwa  (8)

Accident Polanaruwa  (9)

Accident Polanaruwa  (10)

Accident Polanaruwa  (11)