செய்திகள்

கார்களில் சிவப்பு விளக்கு பொருத்த 9 விவிஐபிகளுக்கு மட்டும் அனுமதி – மத்திய அரசு தீவிர பரிசீலனை

1989ம் ஆண்டு மத்திய மோட்டார் வாகன சட்டத்தின் 108வது பிரிவின் கீழ் யார், யார் எந்தவிதமான சிவப்பு மற்றும் நீல விளக்குகளை பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை விவரத்தை மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

சிவப்பு சுழல் விளக்கு:
* ஜனாதிபதி, துணை ஜனாதிபதி
* பிரதமர், துணைப் பிரதமர்
* மக்களவை, சட்டசபை சபாநாயகர்
* மத்திய, மாநில அமைச்சர்கள்
* திட்டக் கமிஷன் துணைத் தலைவர்
* மாநில ஆளுநர்கள்
* நீதிபதிகள்
* முதல்வர்கள்
* சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்கள்

சுழல் இல்லாத சிவப்பு விளக்கு:
* மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்கள்
* தலைமை தேர்தல் ஆணையர்
* மத்திய தணிக்கை தலைமை அதிகாரி
* மக்களவை, மாநிலங்களவை துணை தலைவர்கள்
* மத்திய இணை அமைச்சர்கள்
* திட்டக் கமிஷன் உறுப்பினர்கள்
* சிறுபான்மை கமிஷன் உறுப்பினர்கள்.
* அட்டர்னி ஜெனரல்
* அமைச்சரவை செயலாளர்
* முப்படை தளபதிகள், துணை தளபதிகள்
* நேரடி வரி வாரிய தலைவர்
* மத்திய நிர்வாக தீர்ப்பாய தலைவர்
* சிறுபான்மை கமிஷன் தலைவர்கள்
* வருமானவரித்துறை தலைமை ஆணையர்
* எஸ்.சி., எஸ்.டி கமிஷன் தலைவர்
* யு.பி.எஸ்.சி தலைவர்
* சொலிசிடர் ஜெனரல்

நீல/மஞ்சள் விளக்குகள்
* போலீஸ்
* ஆம்புலன்ஸ்
* வருமானவரி ஆணையர்
* உள்துறை செயலர்
* போலீஸ் கமிஷனர்