செய்திகள்

கார்த்தியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் தமன்னா

ஒரு நேரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் தன் படங்களாகவே இருந்த கோடம்பாக்கத்திலிருந்து திடீரென்று காணாமல் போனார் தமன்னா. அதாவது கார்த்தியுடன் சிறுத்தை படம் நடித்த பிறகு நான்கு ஆண்டுகள் தமன்னா தமிழில் நடிக்கவே இல்லை.
பையா, சிறுத்தை படங்களில் நடித்தபோது கார்த்தியுடன் அவருக்கு ஏற்பட்ட காதல்தான் இதற்கெல்லாம் காரணம் என சிலர் செய்திகள் வெளியிட்டனர். கார்த்தியுடன் நடிக்கக் கூடாது என தமன்னா மிரட்டப்பட்டதாகக் கூட கிசுகிசுத்தனர்.
கார்த்தியும் திருமணம், குடும்பம் என செட்டிலாகிவிட்டார். தெலுங்குப் பக்கமே இருந்த தமன்னாவும் மெல்ல வீரம் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். இப்போது 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கார்த்தியுடன் ஜோடி சேருகிறார் தமன்னா. பிவிபி சினிமா நிறுவனம் தமிழ் – தெலுங்கில் தயாரிக்கும் மெகா பட்ஜெட் படத்திலிருந்து ஸ்ருதிஹாஸன் விலகிக் கொண்டார் அல்லவா.. அந்த வாய்ப்புதான் தமன்னாவுக்குப் போயிருக்கிறது. ஆக ‘தடை’ நீங்கிவிட்டது. வெற்றிப் பட ஜோடி மீண்டும் சேர்ந்திருக்கிறது.