செய்திகள்

கார்ப்ரேட் நிறுவனம் ஒன்றின் கையில் சிக்கி திமுக சீரழிந்து வருகிறது – வைகோ!

அதிமுகவிடமிருந்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஆயிரத்து 500 கோடி ரூபாய் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது திமுகவால் திட்டமிட்ட பரப்பப்படும் வதந்தி என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சியில் தேமுதிக மக்கள் நலக்கூட்டணியின் வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வைகோ, கார்ப்ரேட் நிறுவனம் ஒன்றின் கையில் சிக்கி திமுக சீரழிந்து வருவதாக தெரிவித்தார். தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்ததை பொறுக்க முடியாமல், அதிமுகவிடமிருந்து 1500 கோடி ரூபாயை மக்கள் நலக் கூட்டணி தலைவர் பெற்றதாக திமுக வதந்திகளை பரப்பி வருவதாக வைகோ குற்றம்சாட்டினார்.

வழக்கறிஞர்கள் மாநாட்டில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிறந்த யுக்திகளை கையாண்டு பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என்றார்.

மக்கள் நலக் கூட்டணியில் மேலும் 2 கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

ஊழல் மற்றும் மதுவை ஒழிப்பது, ஆட்சியில் பங்கு என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, தேமுதிகவுடன், மக்கள் நலக்கூட்டணி கை கோர்த்துள்ளதாக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வழக்குறைஞர்கள் மாநாட்டில் பேசினார்.

N5