செய்திகள்

கார் விபத்தில் கடற்படை அதிகாரி உட்பட மூவர் காயம்

மதவாச்சி மன்னார் வீதியில் செட்டிக்குளம் பிரதேசத்தில் சொகுசு காரொன்று வீதியை விட்டுவிலகி விபத்துக்குள்ளாதில் கடற்படை அதிகாரி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்துள்ளனர் என்று செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மூவரும் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செட்டிக்குளம் பொலிஸில் இருந்து இரண்டுகிலோமீற்றர் தூரத்திலேயே இந்த அனர்த்தம் நேற்று இடம்பெற்றுள்ளது. கார் சாரதி, தூங்கிவிட்டதனாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.