செய்திகள்

காற்றுடன் கடும் மழை! நுவரெலியாவில் 68 பேர் இடம்பெயர்வு (படங்கள்)

நுவரெலியா மாவட்டம் நுவரெலிய பிரதேச சபைக்கு உட்பட்ட டயகம சந்திரிகாமம் தோட்டப் பகுதியில் 09.04.2015 அன்று பிற்பகல் 3 மணியளவில் காற்றுடன் கூடிய பெய்த கடும் மழையின் காரணமாக, 7 வீடுகள் பாதிக்கப்பட்டதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட 68 பேர் சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வனர்த்தத்தினால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனா்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் தோட்ட நிர்வாகம் மற்றும் தோட்ட பொதுமக்களால் முன்னெடுக்கப்படுகிறது.

பெய்த கடும் மழையின் போது ஆங்காங்கே ஐஸ் மழையும் பெய்துள்ளமை குறிப்பிடதக்கது.

IMG_0323

IMG_0324

IMG_0325

IMG_0326

IMG_0327

IMG_0328