செய்திகள்

காலிமுகத்திடல் கடலுக்கு குளிக்கச் சென்றவரை காணவில்லை

கொழும்பு காலிமுகத் திடல் பகுதி கடலில் குளித்துக்கொண்டிருந்த ஒருவர் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இன்று காலை இந்ந சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கொள்ளுப்பிட்டி பகுதியை சேர்ந்த 30வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் கோயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவரை கண்டுபிடிக்க கடற்படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.