செய்திகள்

காலி கடற்படைத்தளம் அம்பாந்தோட்டைக்கு மாறுகிறது

கடற்படையின் தென்பிராந்தியத் தலைமையகம், அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படவுள்ளதாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.

 கடற்படையின் தென் பிராந்தியத் தலைமையகம், காலி துறைமுகப் பகுதியில்- எஸ்எல்என்எஸ் தக்சிண என்ற பெயரில்இயங்கி வருகிறது.

இந்த கடற்படைத் தளமே, அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படவுள்ளதாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரி்வித்துள்ளார். பீஜிங்கில்   நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டைத் துறைமுகப் பிரதேசத்தை அண்டி, சீனாவின் முதலீடுகள் இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த மாற்றம் இடம்பெறவுள்ளது.

அம்பாந்தோட்டைத் துறைமுகப் பகுதியை சீனா தன்வசம் எடுத்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில்,   பாரிய கடற்படைத் தளம் அங்கிருப்பதை உறுதிப்படுத்தவே இந்த மாற்றம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

n10