செய்திகள்

காலி வீதியில் உருக்குலைந்த சடலமொன்று மீட்பு

மொரட்டுவ காலி வீதியில் வீர புரன்ஹப்புகாமி விளையாட்டு மைதானத்துக்கு அருகில் உருகுலைந்த நிலையில் இன்று அதிகாலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலத்தின் மீது வீதியால் சென்ற வாகனங்கள் பல ஏறிசென்றுள்ளதாகவும் இதானால் அந்த சடலம் யாருடையது என கண்டுபிடிக்க முடியாதவாறு உருகுலைந்த நிலையில் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாரெனும் இவரை கொலை செய்து வீதியில் வீசியிருக்கலாம் அல்லது வாகன விபத்தில் இவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.