செய்திகள்

கால்பந்து போட்டிகளில் தொடர் முறைகேடுகள்: பிபா உயர் அதிகாரிகள் அதிரடி கைது

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில்இ ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) உயர் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிபாவின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சூரிச் நகரில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். இன்று அதிகாலையில் சுவிட்சர்லாந்தின் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சாதாரண உடையில் ஓட்டலுக்கு வந்து விசாரணை நடத்தி பல அதிகாரிகளை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பிபா தலைவர் செப் பிளாட்டர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உலகக்கோப்பையை நடத்தும் முயற்சிகள்இ சந்தைப்படுத்துதல் மற்றும் ஒளிபரப்பு ஒப்பந்தம் என பல்வேறு வகைகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமெரிக்காவின் எப்.பி.ஐ. விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளது. எனவேஇ கைது செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் விசாரணைக்காக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.