செய்திகள்

காவத்தையில் காணாமல்போன பெண்ணை தேடும் நடவடிக்கையில் கடற்படை

இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தை கொட்டகெத்தன பகுதியில் நேற்றைய தினம் காணாமற் போன மூன்று பிள்ளைகளின் தாயாரை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இன்று தெரிவித்துள்ளார்.

காவத்தை பகுதியை அண்மித்த பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமைபுரியும் பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.