செய்திகள்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒத்திவைப்பு

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் வரும் ஜூலை 19ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. ஏற்கனவே, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்று, தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை.

இதையடுத்து, காவிரி கண்காணிப்புக் குழு அமைத்து, கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், காவிரி நதியின் குறுக்கே புதிய அணைகள் கட்ட தடை விதிக்கக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ஆர்.கே.அகர்வால் மற்றும் ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என கர்நாடக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்காததால், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 19ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

N5