செய்திகள்

கிணற்றில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்ட இளம்பெண்! யாழ்.மானிப்பாயில் சம்பவம்

யாழ்.மானிப்பாய் பகுதியில் இளம் பெண்ணொருவர் நேற்று வியாழக்கிழமை(14.5.2015) அப் பகுதியிலிலுள்ள கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும்,தொடர்ச்சியாகச் சிகிச்சைகள் மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை காணாமற் போயிருந்தார்.

இந்த நிலையில் அந்தப் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து நேற்றுக் காலை குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் கிழக்கு மானிப்பாயைச் சேர்ந்த சோமசுந்தரம் அனித்தா(வயது-33) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.சம்பவம் தொடர்பில் மானிப்பாய்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.நகர் நிருபர்-