செய்திகள்
கித்துல்கல இங்கோயா ஆலய கும்பாபிஷேகம் நாளை
கேகாலை மாவட்ட கித்துல்கல இங்கோயா தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன பஞ்ச குண்ட பக்ஷி பிரதிஷ்ட மஹா கும்பாபிஷேகம நாளை ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெறவுள்ளது.
கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆலயத்தின் அலங்கார உற்சவம் ஆரம்பமானது. இந்நிலையில் நாளை காலை மஹா கும்பாபிஷேகம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதனை தொடர்ந்து பிற்பகல் அன்னதானம் வழங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதேவேளை தொடர்ந்து 12 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று பின்னர் தேர்த்திருவிழா உற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

n10