செய்திகள்

கின்னஸ் புத்தகத்தில் சுசீலா

பிரபல பின்னணி பாடகி சுசீலா அதிக பாடல்கள் பாடியவர் என்ற வகையில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.

அதிக தனிப்பாடல்கள் பாடியவர் என்ற வகையில் அவரது சாதனை கின்னஸ் உலகச் சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் புள்ளி விபரப்படி கடந்த 1960 முதல் தற்போது வரை 17, 695 பாடல்கள் பாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு ஜனவரி 28-ல் சரிபார்க்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

கடந்த 1952-ல் திரைவாழ்வைத் தொடங்கிய பி.சுசீலா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் ஜோடிப் பாடல்கள் மற்றும் தனிப் பாடல்கள் பாடியுள்ளார்.

n10