செய்திகள்

கியுபாவும், அமரிக்காவும் தூதரகங்களை திறக்கவுள்ளன-

அமெரிக்காவும், கியுபாவும் இம்மாதம் தங்கள் நர்டுகளில் பரஸ்பரம் ஏனையநாட்டின் தூதரகங்களை திறக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா இதனை இரு நாடுகளினது உறவுகளில் புதிய அத்தியாம் என வர்ணித்துள்ளார்.
54 வருடங்களிற்கு முன்னர் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா ஹவானாவில் உள்ள தனது தூதரகத்தை மூடியது.
அமெரிக்க இன்று கியுபாவுடன் இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்த தீர்மானித்துள்ளது என்பதையும், இரு நாடுகளும் பரஸ்பரம் தூதரகங்களை திறக்கவுள்ளன என்பதையும் நான் அறிவிக்கவிரும்புகிறேன் என ஓபாமா தெரிவித்துள்ளார்.
கியுபா அரசாங்கத்துடனும் அந்த நாட்டு மக்களுடனும் உறவுகளை ஏற்படுத்துவதனை நோக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையிது
இது கடந்தகால ங்களால் நாங்கள் சிறைப்பிடிக்கப்படவில்லை என்பதையும் வெளிப்படுத்துகின்றது,இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி கியுபாவில் திறக்கப்படவுள்ள அமெரிக்க தூதுரகத்தில் எமது கொடியை ஏற்றுவதற்காக அங்கு செல்வார் என ஓபாமா தெரிவித்துள்ளார்