செய்திகள்

கியுபா சென்றடைந்தார் ஓபாமா

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தை மேற்கொண்டு கியுபா சென்றடைந்துள்ளார்.1959 கியயுபா புரட்சியின் பின்னர் அமெரிக்க ஜனாதிபதியொருவர் கியுபாவிற்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதற்தடவை,இந்த விஜயத்தின்போது ஓபாமா கியுபா ஜனாதிபதி ரவுல் கஸ்டிரோவினை சந்திப்பார் எனினும் அவர் பிடல் கஸ்டிரோவினை சந்திக்க மாட்டார்.அமெரிக்க ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ள அதேவேளை கியுபா வெளிவிகார அமைச்சர் அவரை வரவேற்றுள்ளார்.

obama cuba

கியுபாவில் சில மாதங்களிற்கு முன்னரே ஏற்படுத்தப்பட்டுள்ள அமெரிக்க தூதரகத்தின் பணியாளர்களுடன் உரையாடியுள்ள ஓபாமா கியுபாவிற்கான விஜயம் அற்புதமானது என குறிப்பிட்டுள்ளார்,1928 இல் அப்போதைய ஜனாதிபதி கல்வின் கூலிச் யுத்தக்கப்பலில் கியுபாவிற்கு வந்தார்,அவரிற்கு இஙகு வருவதற்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டன, எனக்கு மூன்று மணிநேரங்களே தேவைப்பட்டது, இந்த விஜயம் கடந்த காலத்தை விடபிரகாசமானதாகயிருக்கப்போகின்ற எதிர்காலத்திற்கான எனது எண்ணங்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் என ஓபாமா குறிப்பிட்டுள்ளார்.