செய்திகள்

கியுபா ஜனாதிபதி பாப்பரசர் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசரை சந்தித்துள்ள கியுபா ஜனாதிபதி ரவுல் கஸ்ட்ரோ தனது நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நெருக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்ததற்காக பாப்பரசரிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கியுபாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்தமைக்காக கியுபா ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்தார் என பாப்பரசரின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது நடுக்கடலில் சிக்கிதவிக்கும் கியுபா குடியேற்றவாசிகளினை சித்தரிக்கும் ஓவியமொன்றினை கஸ்ட்ரோ பாப்பரசரிற்கு வழங்கியுள்ளார்.
கியுபா ஜனாதிபதியும் அவரது வெளிவிவகார அமைச்சரும் பாப்பரசருடன் ஓரு மணிநேர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர். ஸ்பானிய மொழியில் இந்த பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமான முறையில் இடம்பெற்றதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.