செய்திகள்

கிரகரி வாவியில் வாவியில் சடலம் மீட்பு

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியின் நடுப்பகுதியில் சடலமொன்று மிதப்பதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மாகஸ்தோட்டயில் வசித்து வரும் பிரதேச மக்கள், கிரகரி வாவியில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

நுவரெலியா மாவட்ட நீதவான் ஸ்தலத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் வாவியில் இருந்து மீட்கப்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளது.

எனினும் இவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லையெனவும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.