செய்திகள்

கிரிகெட் சுற்றுப்போட்டி

அக்கரப்பத்தனை மன்றாசி தோட்ட யூத் எக்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அணிக்கு ஆறுபேர் கொண்ட மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி மன்றாசி பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைப்பெற்றது.

இப்போட்டியில் மன்றாசி அம்மன் அணி முதலாம் இடத்தினையும் அட்டன் விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தினையும் பெற்றது.

வெற்றிப்பெற்ற அணிகளுக்கு அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரி திரு. ஆனந்த மற்றும் தோட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டு வெற்றி கேடயங்கள் வழங்கினர்.

20150616_182507 20150616_181952