செய்திகள்

கிரிக்கட் மகளிர் அணியினரிடம் பாலியல் இலஞ்சம் கேட்டவர்களுக்கு சிக்கல்

இலங்கை கிரிக்கெட் மகளிர் அணிளை சேர்ந்தவர்களிடம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட விசாரணைகுழுவின் அறிக்கையின் பிரகாரம் அந்த அணியின் முகாமையாளர்கள் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்க்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகளிர் அணியிலுள்ள விளையாட்டு வீராங்கணைகளிடம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தவென கடந்த நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை தற்போது விளையாட்டு துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் பிரகாரம் அந்த அணியின் முகாமையாளர்கள் சிலர் தொடரபான குற்றச்சாட்டுகள் உறுதியாகியள்ளதாக தெரியவருகின்றது.