செய்திகள்

கிரிக்கட் ரசிகர்கள் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய 44 அற்புதமான படங்கள்

எல்லா விளையாட்டுக்களைப் போல, கிரிக்கட் விளையாடும்போதும் சில அற்புதமான தருணங்கள் அப்படியே புகைப்படங்களுக்குள் பதிவுசெய்யப்பட்டு விடுகின்றன. கனவான் விளையாட்டு என்று அழைக்கப்படும் கிரிக்கட் விளையாட்டின் வரலாற்றில் சில அரிய தருணங்களில் ‘கிளிக்’ செய்யப்பட்ட 44 அற்புதமான புகைப்படங்கள் இதோ:

1

இறுதி தடவையாக துடுப்பெடுத்தாடுவதற்காக ஆடுகளத்திற்குள் நுழைய தயாராகும் சச்சின்- மேற்கிந்திய அணிக்கு எதிராக மும்பாய் வான்கடேயில்

2

டில்லி பெரேசாகோட்லா மைதானத்தில் பாகிஸ்தானிற்கு எதிராக பத்து விக்கெட்களையும் வீழ்த்தி உலக சாதனை படைத்த கும்ளே

3

சுனாமியால் சிதைவுண்ட காலி மைதானம்

4

யுவராஜ் சிங் ஒரேஓவரில் அடித்த ஆறு சிக்சர்களில் ஆறாவது சிக்ஸ்- பந்துவீச்சாளர் இங்கிலாந்தின் ஸ்டுவார்ட் புரோட்-2007 இருபதிற்கு இருபது உலககிண்ணத்தில்

5

1983 உலக கிண்ணத்தை இந்தியா வென்ற தருணம்- ஜிம்மி அமர்நாத் விக்கெட்டை வீழ்த்தியதும் ஆடுகளத்திற்குள் நுழைந்த இரசிகர்கள்

6

லோர்ட்சில் இடம்பெற்ற நட்வெஸ்ட் முத்தரப்பு தொடரை வென்ற பின்னர் சவுரவ்கங்குலி தனது மேலாடையை கழற்றி கையில் வைத்து சுழற்றுகிறார்.  இதற்கு ஏழு மாதத்திற்கு முன்னர் இந்தியாவை இந்தியாவில் தோற்கடித்தவேளை பிளின்டோவ் இதனை செய்திருந்தார்

7

இந்தியா அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் பெரேசாகோட்லா மைதானத்தில் தேனீக்கள் தாக்கியபோது

8

அவுஸ்திரேலியாவின் 434 ஓட்டங்களை துரத்தி வெற்றிபெற்று ஒரு நாள் கிரிக்கெட்டின் போக்கை மாற்றிய தென்னாபிரிக்கா

9

1938 இல் ஹெடிங்லீயில் ஓரு தேநீர் இடைவேளை

10

லோர்ட்சின் 200 வருடபூர்த்தியை குறிக்குமாக நடைபெற்ற போட்டியின்போது

11

அணிகள் 111 ஓட்டங்களை பெற்றவுடன் நடுவர் டேவிட் செப்பேர்ட் இவ்வாறு காலை துள்ளுவார்.  111 ஆபத்தான ஓட்ட எண்ணிக்கை ( நெல்சன்) விக்கெட்கள் விழும் என்ற ஐதீகம் கிரிக்கெட் உலகில் காணப்படுகின்றது

12

1975 இல் முதலாவது உலக கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய அணியின் தலைவர் கிளைவ்லொயிட்

13

பவுன்சர் பந்து தாக்கி மரணித்த பிலிப் ஹியுசிற்கு தனது முதலாவது டெஸ்ட் சதத்தை அர்ப்பணிக்கும் ஸ்மித் ஹியுஸ் ஆஸியின் 408 வது டெஸ்ட் வீரர்

14

வெற்றிபெறுவதற்கு ஓரு பந்தில் 6 ஓட்டங்கள் தேலைப்பட்ட நிலையில் தனது அணித்தலைவரும் சகோதரருமான கிரேக்சப்பலின் உத்தரவிற்கு ஏற்ப பந்தை வீசாமல் உருட்டிவிட்ட டிரெவர் சப்பல்

15

தனது இறுதி இனிங்சில் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்த டொன்பிரட்மன்- இதன்மூலம் 100 என்ற சராசரியை தவறவிட்டார்

16

1999 உலககிண்ண அரையிறுதியில்தென்னாபிரிக்காவின் அலன் டொனால்ட் ரன்அவுட் ஆகின்றார்.வெற்றிக்கு ஓரு ஓட்டம் தேவைப்பட்ட நிலையில் இது இடம்பெற்றது

17

ஆஸியின் வேகப்பந்து வீச்சாளர் டெனிஸ்லில்லிக்கு எதிராக பட்டை ஓங்கும் பாக்கிஸ்தானின் ஜாவிட் மியன்டாட். மியன்டாட் ஒரு ஓட்டத்தை பெற முயல அதனை தடுக்க லில்லி முயல வாக்குவாதம் மோதலாக மாறியது

18

களத்திலிருந்த மேற்கிந்திய அணி துடுப்பாட்ட வீரர்கள் காயமடைந்ததால் ( சந்தர்போல்,ஜேகப்ஸ்)அவர்களுக்காக ஒடுவதற்கு பதில் வீரர்களாக சாமுவேல்ஸ்,ஹின்டஸ் வந்தனர். ஆனால்இது வெறுமனே ஏழு ஓட்டங்களுக்கே நீடித்தது

19

1977 ம் ஆண்டு நியுசிலாந்திற்கு எதிரான டெஸ்ட்போட்டியில் பந்துவீசிய டெனிஸ் லில்லிக்கா 9 சிலிப்ஸ்

20

பின்னர் 1999 இல் ஹராரேயில் சிம்பாப்வேயிற்கு எதிரான ஓரு நாள் போட்டியில் அதே களத்தடுப்பு வியூகம்

21

இங்கிலாந்திற்கு எதிராக 400 ஓட்டங்களை பெற்ற பின்னர் மண்ணை முத்தமிடும் மேற்கிந்திய அணியின் பிரையன் லாரா

22

1992 உலககிண்ணத்தில் பாக்கிஸ்தானின் இன்சமாமை ஆட்டமிழக்கச்செய்யும் ஜோன்டிரோட்ஸ்.  களத்தடுப்பில் புதிய வளர்ச்சிக்கு வழிகாட்டிய ரன்அவுட் இது

23

தனது இறுதி டெஸ்டிற்கு பின்னர் வான்கடே மைதானத்தை முத்தமிடும் சச்சின்

24

மூன்றாவது தடவையாக உலககிண்ணத்தை வென்ற களிப்பில் ஆஸி

25

தென்னாபிரிக்காவின் ஏ.பிடிவிலியர்ஸ் 31 பந்துகளில் ஒரு நாள்போட்டியின் வேகமான சதத்தை பெற்றபின்னர் அவருக்கு தலைவணங்கும் கிறிஸ் கெயில்

26

சச்சினின் பாதம் தொட்டு ஆசீர்வாதம் பெறும் யுவராஜ்

27

மக்கள் மனதை கொள்ளை கொண்ட டொனி கிரெய்க் கிரிக்கெட்டிற்கு ஆற்றிய சேவைக்கான மரியாததை- அவரது மறைவிற்கு பின்னர்

28

பில்லியன் கணக்கான இதயங்கள் காத்திருந்த தருணம்

29

உடைந்த கையுடன் துடுப்பெடுத்தாடும் மேற்கிந்திய அணியின் மல்கம் மர்ர்சல்.  96 ஓட்டங்களுடன் ஆடுகளத்திலிருந்த சக வீரர் லரிகோம்ஸ்.  அவரது சதத்தை பெற உதவுவதற்காக கை உடைந்த நிலையிலும் இறுதி வீரராக களமிறங்கிய மார்சல், கோம்ஸ் அவரது சதத்தினை பெற உதவினார். மார்சல் 4 ஓட்டங்களையும் பெற்றார்.பின்னர் 53 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களையும் வீழ்த்தினார்

30

கிரிக்கெட் உலகம் என்றும் மறக்காத மூவர்

31

இங்கிலாந்து அணி இரண்டு ஓட்டங்களால் வென்ற பின்னர் பிரெட்லீயிற்கு ஆறுதல் தெரிவிக்கும் பிளின்டோவ்

32

விரல் உடைந்த பின்னரும் துடுப்பெடுத்தாட வந்த தென்னாபிரிக்க அணிதலைவர் கிரஹாம் ஸ்மித்.டெஸ்ட் போட்டியில் 8 ஓவர்கள் வரை சமாளித்தால் ஆஸியின் வெற்றியை தடுக்கவாம் என்ற நிலையில் விரல் உடைந்த நிலையில் களமிறங்கினார் ஸ்மித்.  ஆனாலும் தோல்வியை தடுக்க முடியவில்லை

33

இந்தியாவின் குண்டப்பா விஸ்வநாத் சதமடித்த பின்னர் அவரை குழந்தையை போல தூக்கி தாலாட்டும் இங்கிலாந்து அணி தலைவர் டொனி கிரெய்க்

34

துடுப்பெடுத்தாடுவதற்காக அலுமினியம் பட்டுடன் களமிறங்கிய டெனிஸ் லில்லி

35

மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டியில் தாடை உடைந்த நிலையிலும் 14 ஒவர்கள் தொடர்ச்சியாக பந்துவீசிய கும்ளே

36a

1996 உலக கோப்பையில் வெங்கடேஸ்பிரசாத்தின் பந்தை எல்லைகோட்டை நோக்கி அடித்த பின்னர் அந்த பந்தை சென்றுஎடுக்குமாறு சைகைகாட்டும் பாக்கிஸ்தானின் அமீர் சொகைல்

36

அடுத்த பந்தில் அவரது விக்கெட்டை சாய்த்தார் பிரசாத்

37

100 சதத்தை பெற்ற சச்சின்

38

2009 ம் ஆண்டு பாக்கிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த இலங்கை வீரர்கள் கடாபி மைதானத்திலிருந்து ஹெலிக்கொப்டர் மூலம் கொண்டு செல்லப்படுகின்றனர்

39

1976 ஆகஸ்ட் 4 ம்திகதி லோட்சில் இடம்பெற்ற முதலாவது மகளிர் கிரிக்கெட் போட்டி

40

1981 இல் ஆஸிக்கு எதிராக 149ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்த இங்கிலாந்தின் பொத்தம்

41

இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த களத்தடுப்பாட்ட வீரர் என வர்ணிக்கப்படும் எக்னாத் சொல்கர் 1971 இல் ஓவல் மைதானத்தில் பிடித்த அற்புதமான கட்ச்

42

2007 உலககிண்ணத்தில் பேர்முடாவின் டிவைன் லெவெரொக் ரொபின் உத்தப்பாவை ஆட்டமிழக்கச்செய்வதற்காக பிடித்த அற்புதமான ஸ்லிப் கட்ச்

43

முன்னர் தான் கிரிக்கெட் விளையாடிய அவுஸ்திரேலியாவிற்கு எதிராக தென்னாபிரிக்காவிற்கு தலைமை தாங்கி வென்ற கெப்லர் வெசெல்ஸ். இரு நாடுகளுக்காக விளையாடிய ஓரு சில வீரர்களில் வெசலசும் ஒருவர்.அவர் ஆஸிக்காக 24 போட்டிகளில் விளையாடியிருந்தார்.1991 இல் தென்னாபிரிக்கா மீதான தடைநீக்கப்பட்ட வேளை அணிதலைவராக்கப்பட்டார். ஆஸி அணிக்கு எதிராக தென்னாபிரிக்காவின் 92 உலககிண்ணத்தில் 82 ஓட்டங்களை பெற்றார்

44

கிரிக்கெட் உலகின் இரு அற்புதங்கள்