செய்திகள்

கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமம் மீண்டும் ரூபவாஹினிக்கு

அடுத்து வரும் மூன்று வருடங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை தேசிய தொலைக் காட்சி (ரூபவாஹினி)க்கு வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாக குழு தீர்மானித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமம் சீ.எஸ்.என் அலைவரிசைக்கே வழங்கப்பட்டிருந்து. அந்த நிருவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பாக பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில் மீண்டும் அந்த உரிமத்தை தேசிய தொலைகாட்சிக்கு வழங்குவதற்கு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி கடந்த 4ம் திகதி குழு கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.