செய்திகள்

கிளங்கன் வைத்தியசாலையை உடனடியாக திறக்குமாறு கோரிக்கை

இந்திய அரசின் உதவியால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைப்பதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதாக ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திறந்து வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்திருக்கின்ற போது தீடிரென அவா் மலையக பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளமாட்டார் என இலங்கைக்கான இந்திய நாட்டு தூதுவர் தனக்கு தெரிவித்ததாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் இயக்குநா் அன்வா் ஹம்தானி தெரிவித்தார்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கத்தினால் 12.03.2015 அன்று அட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற சங்க கூடத்தின் போதே அவா் இவ்வாறு தெரிவித்தார்.

அவா் மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில்…

தற்போது உள்ள கிளங்கன் வைத்தியசாலையில் போதியளவு வசதி இல்லாத காரணத்தினால் இந்திய அரசின் உதவியால் புதிதாக பெரியலவிலான எல்லா வசதிகளும் உள்ள இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்திய பிரதமர் மோடியினால் இதனை இந்த மாதம் 15ம் திகதி திறந்து வைப்பதற்கு மத்திய மாகாண சுகாதார அமைச்சினால் அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள நேரத்தில் தீடிரென இந்த தீர்மானம் எடுத்ததுள்ளதாக அவா் தெரிவித்தார்.

அத்தோடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்கு காந்தி என பெயர் சூட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அங்கு காந்தியின் சிலை ஒன்று வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்மாணிகப்பட்ட இந்த வைத்தியசாலையை உடனடியாக திறப்பதற்கு மலையக அரசியல்வாதிகள், பிரதேச வாசிகள் என பலரும் இனணந்து செயற்பட வேண்டும் என அவா் இதன்போது தெரிவித்தார்.

Dickoya Hospitel (9)DSC03754