செய்திகள்

கிளிநொச்சிக்குவடமாகாண ஆளுனர் விஜயம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த வடமாகாண ஆளுனர் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கிளிநொச்சிக்கு நேற்று  விஜயம் செய்த வடமாகாண ஆளுனர்   கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் திணைக்கள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று   பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னரான அபிவிருத்தி திட்டங்கள் குறிப்பாக மீள்குடியமர்வு கல்வி சுகாதாரம் நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் அபிவிருத்திகள் தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.IMG_2366
n10