செய்திகள்

கிளிநொச்சியில் அடிகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி வன்னேரிக்குளம் சோலைப் பகுதியில் ஆண்ணொருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதனால் மூன்று நாட்களுக்கு முன்னர் இவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்னர்.

இந்த காட்டுப் பகுதிக்குச் சென்றவர்கள் சிலர் சடலத்தை கண்டு பொரலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டபோது மூன்று பிள்ளைகளின் தந்தையான நா.பரமேஸ்வரன் (48 வயது) என்பவே சடலமான மீட்கப்பட்டவர் எனத் தெரிய வந்துள்ளது.

இதுவேளை பொதுமக்களால் சந்தேகத்தின் பேதில் பிடிக்கப்பட்ட இருவரையும் தாம் கைது செய்துள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவி;த்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.