செய்திகள்

கிளிநொச்சியில் அறிவுமதி விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்: சரா எம்.பி

கிளிநொச்சி மாவட்ட பொன்நகர் மத்தி, அறிவியல் நகர் மகளீர் அமைப்பிற்கு என அறிவுமதி விளையாட்டு மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
குறித்த மைதானமானது சரவணபவன் எம்.பி அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்தே புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
இதேவேளை நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் யாழ்ப்பாணம் றோட்டறிக்கழகத்தினரால் “எல்லோருக்கும் கல்வி” எனும் கருப்பொருளை அடிப்படயாக கொண்டு  ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்வில் கலந்து கொண்டு பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.imageimage