செய்திகள்

கிளிநொச்சியில் கண்காட்சி

கிளிநொச்சி மனிதாபிமான புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கான தேசிய சங்கத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் தையல் கண்காட்சியும் நாளை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய மகா ஆரம்ப வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ச.மோகனபவனும் சிறப்பு அதிதியாக மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் வே.தபேந்திரனும் கலந்து கொள்ள உள்ளனர்.

செந்தாமரை உதவும் கரங்கள் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் நடத்தப்பட்டு வந்த தையல் பயிற்சியை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு இதன்போது சான்றிதழும் வழங்கப்பட உள்ளன.

மேற்படி சங்கம் பலவித புனர்வாழ்வு பணிகளை வடமாகாணத்தில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.