செய்திகள்

கிளிநொச்சியில் புதிய தொழில் அலுவலக நிர்வாக திணைக்களத்தின் கட்டடம்.

கிளிநொச்சியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட தொழில் அலுவலக நிர்வாக திணைக்களத்தின் புதிய கட்டடம் தொழில்ச்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமர வீர மற்றும் தொழில் மற்றும் தொழில்ச்சங்க உறவுகள் அமைச்சர் செனவரத்தின ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஏ-9 வீதியின் 155ம் கட்டை கனகாம்பிகைக்குளம் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட தொழில்; அலுவலக நிர்வாக திணைக்களத்தின் புதிய கட்டடத்திறப்பு விழா நேற்று (09-04-2016) பகல் 10.00 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கிளிநொச்சிக்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தொழில்;; மற்றும் தொழில்ச்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ டி.ஜெ.செனவரத்தின மற்றும் தொழில்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர ஆகியோர் புதிய கட்டடத்தினை திறந்து வைத்துள்னர்.
கடந்த காலத்தில் குறித்த அலவலகத்திற்கான கட்டடம் இன்றி தற்காலிக இடங்களில் இயங்கி வந்த நிலையிலேயே குறித்த கட்டடம் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
n10