செய்திகள்

கிளிநொச்சியில் பொதுமக்கள் அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் தீவிரம்

வடக்கில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு இன்று காலை தளர்த்தப்பட்டு மீண்டும் இன்று பகல் மீண்டும் அமுலுக்கு வந்துள்ள நிலையில் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை ஆறு மணிவரை நடைமுறையில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு இன்று காலை தளர்த்தப்பட்ட வேளை கிளிநொச்சியில் பொதுமக்கள் அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் தீவிரமாக ஈடுப்பட்டிருந்தனர்.

பொதுச் சந்தைகளில் மக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கும் நோக்கில் பொதுச் சந்தையில் கட்டடப் பகுதிக்குள் மரக்கறிகள் விற்பனை செய்யாமல் சந்தை வளாகத்தில் விற்பனை செய்யப்பட்டிருந்தன. சதொச விற்பனை நிலையம், தனியார் விற்பனை நிலையம் என்பவற்றில் மக்கள் அதிகளவாகக் காணப்பட்டனர்.வங்கிகள், வியாபார நிலையங்கள் முன்பாக அதிகளவான பொதுமக்கள் வரிசையில் இடைவெளிவிட்டு காத்திருந்து தேவைகளை நிறைவேற்றிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)Curfew-Time-Situation-Kilinochchi-Coronavirus-Alert-Situation Curfew-Time-Situation-Kilinochchi-Coronavirus-Alert-Situation-4