செய்திகள்

கிளிநொச்சியில் மத்திய வகுப்புத்திட்ட காணிகளில் குடியிருக்கும் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலக பிரிவின் புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிலுவுள்ள நாதன்திட்டம், மற்றும் உழவனூர் மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண் மக்கள் அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் எம்மையும் உள்வாங்குகள், விரைவாக காணி உரிமம் வழங்குகள், தற்காலிக வீட்டில் எத்தனை வருடங்கள் வாழ்வது? எமக்கும் நிரந்தர வீட்டில் வாழ  ஆசை, உள்ளிட்ட வாசகங்கள் அடங்கியிருந்த பதாதகைகளை ஏந்தி ஆர்ப்பட்டதை மேற்கொண்டர்கள்.

இருந்து இரண்டு பேரூந்துகளில் வருகை தந்த மக்கள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து கிளிநொச்சி மாவட்டச் செயலகம் வரை அமைதி ஊர்வலமாக  சென்று மாவட்டச் செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் தங்களின் கோரிக்கை அடங்கிய ஜனாதிபதிகான மகஜரை கையளித்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் அதிகளவான மக்கள் மத்திய வகுப்புத்திட்டக் காணிகளில் நீண்ட காலமாக சுமார் 30 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர்.  இதனால் இவர்கள் வசித்து வரும் காணிகளுக்கு எவ்வித காணி ஆவணங்களும் இல்லை. இதன் காரணமாக மீள்குடியேற்றத்தின் பின்னரான வீட்டுத்திட்டம், வீதி அபிவிருத்தி, மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டு வருகிறது

இது தொடர்பாக மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் கருத்து தெரிவித்த போது, இந்த மக்கள் குடியிருக்கும் காணிகள் மத்திய வகுப்புத்திட்ட காணிகள் என்பதனால் பிரச்சினைகளை தீர்ப்பது என்பது கடினமான பணியாகும். மத்திய வகுப்புத்திட்ட பிரச்சினை தொடர்பில் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம் தற்போதும் காணி ஆணையாளர் நாயகத்துடன் பேசியிருக்கின்றோம் எனவே பிரச்சினை உரிய முறைப்படி சட்ட ரீதியாக தீர்ப்பதற்கு கால அவகாசம் தேவை எனவும் குறிப்பிட்ட அவர் மாவட்டத்தில் அரச காணிகளில் குடியிருந்த மக்களின் பிரச்சினைகள் இலகுவாக தீர்க்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

1 (5)

01

0

00