செய்திகள்

கிளிநொச்சியில் ரயில் – வான் கோர விபத்து: 4 பேர் பலி (படங்கள்)

கிளிநொச்சி அறிவியல் நகரில் இன்று மாலை ரயில் என்ஜீன் ஒன்று வான் ஒன்றுடன் மோதியதால் ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வானில் பயணம் செய்தவர்களே கொல்லப்பட்டிருக்கின்றார்கள். பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கடக்க முற்பட்ட போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றது.

காயமடைந்தோர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தோரின் சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையின் சவச்சாலை வைக்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1

01

000b