செய்திகள்

கிளிநொச்சி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மே தினம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மே தினக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தவிசாளருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில்  முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் நடைப்பெற்றுள்ளது.

பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமான இம் மே தின நிகழ்வு கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான கட்சியின் ஆதரவாளர்களும் செயற்பாட்டாளர்களும், தொழிலாளர்களும்  உணர்வெழுச்சியுடன் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த மே தினக் கூட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பூநகரிப் பிரதேச இணைப்பாளர் த. றோயஸ், பளை பிரதேசசபை உறுப்பினர். அன்ரன் அன்பழகன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சு.மனோகரன்,கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் கு. அருமைராசா,  கிளிநொச்சி மாவட்ட மகளீர் அமைப்புகள் சார்பாக திருமதி.நவரத்தினசோதி கமலாதேவி, கிளிநொச்சி மாவட்ட அழகக சங்கங்களின் சார்பாக, இராஜரத்தினம் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் யோசப் பிரான்சிஸ், பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் சார்பாக சீ.துரைசிங்கம், ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

அத்தோடு வடமாகாணசபை உறுப்பினர்  வை. தவநாதன்;  பாராளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் ஆகிய கே.என் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 2015 மே தினப் பிரகடனத்தை வாசித்தார் தொடர்ந்து   பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமாகிய முருகேசு சந்திரகுமார் உரையாற்றினார்.

001

000-1

000b

000