செய்திகள்

கிளிநொச்சி கண்டாவளையில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் பாடசாலைகள்

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் உள்ள 24 பாடசாலைகளில் கூடுதலான பாடசாலைகள் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் ஆளணி வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கி வருவதனால் தமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கண்டாவளைக் கல்விக் கோட்டத்தில் உள்ள இரண்டு 1ஏ பி பாடசாலைகள் மூன்று 1 சீ பாடசாலைகள் உட்பட 24 பாடசாலைகள் இயங்கி வருவதுடன் சுமார் ஐயாயிரத்து 456 மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் 341 ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புன்னைநீராவி பிரமந்தனாறு கல்லாறு, இராமநாதபுரம் கல்மடுநகர், நாகேந்திரபுரம் உள்ளிட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறைகள் காணப்படுகின்றது என்றும் குறிப்பாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடரீதியான ஆசிரியர் பற்றாக்குறையே அதிகம் காணப்படுவதாக மாணவர்களின் பெற்றோர்களால் பல்வேறு தரப்பிரிடமும் முறையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆசிரிய ஆளணி வளப்பற்றாக்குறை என்பதை விட குறிப்பிட்ட சில பாடசாலைகளில் பௌதீக வளப்பற்றாக்குறைகளும் நிலவி வருவதாகவும் இவ்வாறு தேவைகளை நிறைவு செய்து தமது பிள்ளைகளின் கல்வி உரிய நடவடிக்கை எடுக்;குமாறு இப்பகுதி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.